தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள விஜய்க்கு தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக கேரளாவில் விஜய் தான் டாப். அவர் படம் வெளியானால், மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட மலையாள முன்னணி நடிகர்களே ஜர்க் ஆவார்கள்.
இந்த நிலையில், கேரளாவில் விஜய்க்கு இருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பது பற்றி முன்னணி மலையாள நடிகரான லால், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய நடிகர் லால், “விஜய் படம் என்றால் டான்ஸ், சணை என அனைத்தும் மீட்டர் வைத்து அளந்தது போல சரியாகவும், அளவோடும் இருக்கும். அதேபோல், எதாவது அட்ராக்ட் பண்ற விஷமும் படத்தில் இருக்கும். சும்மா எந்த படமும் சக்ஸஸ் ஆகாது.
மலையாள படங்கள் என்றால் விருது கிடைக்கும், ஆனால் தமிழ்ப் போல மசாலா கலந்து கொடுத்தால் தான் அதிக ரசிகர்கள் பார்ப்பார்கள். அதனால் தான் கேரளாவில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.