பிரித்தானியாவின் Aspull பகுதியில் பரபரப்பான காலை நேரத்தில் சாலையைக் கடக்க முயன்ற ஒரு மாணவியின் மீது கார் ஒன்று மோதி சற்று தூரம் இழுத்துச் சென்ற நிலையிலும் அந்த மாணவி தானாகவே எழுந்து நடந்த சம்பவம் பார்த்தவர்களை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்தது.
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கண் முன்னே ஒரு மாணவி சாலையைக் கடக்க முயலும்போது கார் ஒன்று அவள் மீது மோதியது.
சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என்ன ஆனதோ என பதறிப் போய் நிற்க, அந்த மாணவியோ தானே எழுந்து தன் பொருட்களை எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்குகிறார்.
அந்த காரை ஓட்டியவர் ஒரு அக்கவுண்டண்ட். காலை வேளையில் அவசரமாக அலுவலகத்திற்கு செல்லும் நேரம் மிகவும் ஆபத்தானது என்கிறார் அவர்.
எனக்கு முன்னே நடந்ததைக் கண்டு ஒரு கணம் ஆடிப்போனேன் என்கிறார் அவர். இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட ஒரு விடயம் அல்ல.
ஏனென்றால் மோதிய அந்தக் காரின் ஓட்டுநர் சற்று தள்ளி காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்து அவளுக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின் தான் அங்கிருந்து சென்றார் என்று தெரிவித்தனர்.