பிக்பாஸ் தமிழின் இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் நாமினேட் லிஸ்டில் ரித்விகா, ஐஸ்வர்யா, மும்தாஜ், விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர்.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல் பிக்பாஸில் பதிவான வாக்குகள் பற்றி தெரிவித்துள்ளார்.
ரித்விகாவுக்காக சென்ற வாரம் வந்த ஓட்டுகளை விட இந்த வாரம் பல மடங்கு அதிகம் ஓட்டுகள் வந்துள்ளதாம். ஓட்டுகளின் எண்ணிக்கையை பார்த்த கமலே அதிர்ச்சியடைந்து விட்டதாக கூறியுள்ளார்.
மக்கள் வாக்குகளினால் எலிமினேஷனில் இருந்து ரித்விகா காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இதனை கேட்ட ஏனைய போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேவேளை, ரித்விகாவை காப்பாற்ற மும்தாஜ் டாஸ்க் செய்ய முடியாது என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ரித்விகாவிற்கு அதிஷ்டம் குவிவதை போல மக்களின் வாக்குகள் குவிந்து காப்பாற்றப்பட்டுள்ளார். அது மட்டும் இன்றி, மும்தாஜை மக்கள் காப்பாற்றுவார்களா என்பதும் நாளை தான் தெரியும்.