மும்பையில் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்த தனது மகன் நினைவாக தந்தை நகரின் சாலைகளில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்களை மணல் மற்றும் சரளைக்கற்கள் கலவை கொண்டு அடைத்து வருகிறார்.
தனது மகன் போல் யாரும் விபத்தில் சிக்கி உயிரிழக்ககூடாது என அவரது தந்தை செய்து வரும் இச்செயல் காண்போரை மனம் நெகிழ வைத்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த தாதராவ் பில்ஹோரே என்பவரின் மகன் ப்ரகாஷ் பில்ஹோரே (16). கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது உறவினருடன் பைக்கில் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
அவருடன் பயணம் செய்த உறவினர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். இதனிடையே விபத்தில் சிக்கி உயிரிழந்த தனது மகன் நினைவாக தாதராவ் பில்ஹோரே கடந்த 3 வருடமாக 600 பள்ளங்களை அடைத்து வருகிறார்.
மணல் மற்றும் சரளைக்கற்கள் கலவை கொண்டு பள்ளங்களை அடைத்து வரும் தாதராவ் பில்ஹோரே, காய்கறிகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
தனது மனைவி மற்றும் மகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தாதராவ் பில்ஹோரே கூறுகையில், ப்ரகாஷின் திடீர் மரணம் எங்கள் வாழ்வில் வெற்றிடத்தை ஏற்படுத்தியது.
அவனை நினைத்து தான், இந்த வேலையை நான் செய்து வருகிறேன். என் மகன் மாதிரி யாரும் இது போல் விபத்தில் சிக்கி உயிரிழக்ககூடாது எனக் கூறியுள்ளார்.