பிரபல டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானா அவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
அதன் பின்னர் பல படங்களில் டித்திருந்தலும் பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை போன்ற படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிக்க வருவதற்கு முன்பாக வாங்கிய சம்பளம் தொலைக்காட்சியில் வாங்கிய சம்பளம் குறித்து கூறியுள்ளார்.
அதாவது, அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய போது ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 ரூபாய் வரை சம்பளம் பெற்றுள்ளார்.
அதுவும் மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருக்கும் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நீண்ட உழைப்பிற்கு பின்னர் தான் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துள்ள இவர், தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் விரிவில் திரைக்கு வர இருக்கும் கனா படத்தில் நடித்துள்ளார்.
இதை தெடர்ந்து தனுஷ் நடித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்ட சிம்பு நடிப்பில் வெளியாகவுள்ள செக்க சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.