ஆண்களை திட்டிக்களைப்பதே பெண்களுக்கு வேலையாகிவிட்டது, ஏன்? டிரெண்டு என்றே சொல்லலாம். அவர்கள் செய்யும் க்யூட்டான விஷயங்களை கவனித்தது உண்டா?
ஆண்களின் மனோபாவம் பெண்களை விட மிகவும் மாறுபட்டது. உண்மையில் சொல்லப்போனால் பெண்களின் கண்ணோட்டம் ஆண்களுக்கு எட்டுவது மிகவும் அபூர்வமானது.
பெண்கள் மென்மேலும் ஆடைகள், அணிகலன்கள் தினம் ஒரு கம்மல், என தன்னை அழகு படுத்திக்கொள்ள மிகவும் ஆர்வம் காட்டவர். அப்படி ஆர்வம் காட்டினாலும், இது தான் என்னிடம் நான் வேண்டி கனவு கண்ட, மனதை கவரும் பொலிவு என்பது அவர்களின் எண்ணம்.
இது போதும், இப்போதுதான் என்னை பெருமையாக நான் வெளிக்காட்டுகிறேன் என்று அவர்களுக்கு தோனவே தோனாது.
ஆனால் ஆண்களோ மிகவும் எளிமையானவர்கள். 10 நாளுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்ள இரண்டு ஜீன்ஸ், மிஞ்சிப்போனால், 4 சர்ட்ஸ், 2 டீசர்ட்ஸ் இருந்தால் போதும்.
அதனால், ஆண்கள் ஒரு வருஷத்திற்கு கவலைப்படவே மாட்டாங்க… இப்படிப்பட்டவர்களை எப்பவும் திட்டிக்களைப்பதே பெண்களுக்கு வேலை. ஏன் அப்படி திட்டுவதை டிரெண்டு என்றே சொல்லலாம்.
கொஞ்சம் நிறுத்தி இந்த பக்கம் வந்து இந்த வரிகளை படித்து பாருங்கள்…
ஆண்களை பற்றிய க்யூட்டான சில விஷயங்கள்:
புஜகர பராக்கிரமசாலியாக இருந்தாலும் மனதளவில் ஆண்கள் குழந்தைதான். அவர்களின் குறும்பையெல்லாம் மனைவி, காதலியிடம் கேட்டால் கதை கதையாய் சொல்வார்கள்.
பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள் பெண்களே…! உங்களின் அன்புக்குரிய அந்த ஆண், வேறு எவருக்கும் தெரியாத தன் குழந்தை முகத்தை உங்களிடம் காண்பிக்கிறார் என்று…
குழந்தையா இது நான் குரங்கு குட்டினு நெனச்சேன்!
குழந்தைப் பராமரிப்பில் நீங்கள் தாய் என்றால், ஆண், அந்தக்குழந்தைக்கு நண்பன்…!
எந்தக் குழந்தையை பார்த்தாலும் தாயுணர்வு பெண்களுக்கு வந்து விடும். இது இயல்பு. ஒரு ஆணிடம் அவனின் குழந்தையை கையில் கொடுத்தாலும் அதனை பூனைக்குட்டி, நாய்குட்டி போன்று உருட்டி தான் விளையாடுவான்.
தனக்கு பிடித்த கதாபாத்திரம் போன்று அக்குழந்தைக்கு அலங்காரம் செய்து கொள்வான். தூங்கும் குழந்தையை எழுப்பாமலேயே அதனுடன் தன் ஆசை தீர விளையாடுவான்.
குழந்தைக்கு வலிக்காமலேயே அதனுடன் சண்டையிட்டு சோர்ந்து போவான். கூச்சலிட்டு வாய்விட்டு பிள்ளையை சிரிக்கவைக்கும் தன்மை ஆண்களுக்குத்தான் இருக்கும். பழகிய முரட்டுதனத்தை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் கூடுதல் மென்மையை கையாளும் புது தந்தைகள் பேரழகு.
பெண்களிடம் பம்மும் ஆண்கள் கூட நண்பர்களின் கூட்டத்தில் பொங்குவான்.
ஆள் பார்க்க அமைதி பேர்வழியாக இருப்பான். ஆனால் ஒரு சனிக்கிழமையன்று நண்பர்கள் வீட்டில் கூடியிருக்கையில் ஜன்னல் வழியாக முடிந்தால் எட்டிப்பாருங்கள். அவரின் உண்மை ரூபத்தை.
என்ன நடந்தா என்ன என் தட்டில் தோசை இருக்கணும்.
திருமணம் ஆனவரோ, காலேஜ் படிப்பவரோ, எதுவாக இருந்தாலும் சரி வீட்டுல சண்டை என்றால் கூட சாப்பாட்டில் பாரபட்சமில்லாமல் இருப்பார்கள். பெரும்பாலும் சாப்பாட்டுக்குதான் சண்டையே ஆரம்பிக்கும்.
சமையலில் நான் புலி
உப்பில்லை, ஒரப்பில்லை, ரசமா இது… என வினாவும் சிடுமூஞ்சி என்றாவது ஒரு சமையல் சரியாக செய்துவிட்டால், அதும் கொஞ்சம் டேஸ்ட்டாக இருந்துவிட்டால் போதும்… அலப்பரை தாங்க முடியாது.
சொதப்பிய போதெல்லாம் தன்னை கஜினி முகமதுவாகவே (17 முறை போர்புரிந்து தோல்வி அடைந்த கஜினி) பாவித்துக் கொள்வார்கள். அந்த அசடு வழியும் சமாளிப்பு அழகே…!
சண்டனு வந்துட்டா… ஆஸ்ரமத்தில் இருந்து வந்தவர் போல் தன்னை பாவித்துக்கொள்வதும் ஒருவிதமாக ரசிக்கக்கூடியது தான்.
சண்டைகளின் ஆணிவேரை தேடி ஆராய்ந்து, தெளிவாக பேசி தீர்வை தேடுவது பெண்கள்… சண்டையை பெரிதாக்காமல், முடிந்தால் அக்கணமே நிறுத்துவதை விரும்புவார்கள் ஆண்கள். நிம்மதியாகவே இருக்க விடமாட்டியானு கடுப்பேத்துரமாதிரி ஒரு கேள்வி வேறு!
ஆண்களுக்கு மறதிதான் அழகே
முக்கால்வாசி சண்டைகளில் ஆண்கள் தான் முதலில் சமாதானம் ஆவார்கள். ஏனெனில் கோபம் வரும் வேகத்தில் மறந்து விடும் ஜீவராசி இந்த ஆண்கள். கோபம் மட்டும் இல்லை பிறந்தநாள் தேதி, கல்யாண தேதி… அப்படி மறந்துவிட்டு ஒரு சமாளிப்பு சமாளிப்பார்கள் பாருங்கள்..!
தான் தான் ராஜா, தனிக்காட்டு மந்திரி
காதல் மனைவியாக இருந்தாலும் தனக்கான ஸ்பேஸ் விடவேண்டும் என விரும்புவார்கள் ஆண்கள்.
பிடித்தவர்கள் தங்களை பெருமைக்குரிய பதக்கமாக பாவிக்க பெரிதும் ஆசை படுவார்கள்.
ஆண்கள் பிற ஆண்களிடம் எதிர்பார்ப்பது கூட அசிங்கப்படாமல், பங்கம் ஏற்படாமல் ஒரு பேச்சுவார்த்தை. நீங்கள் தனிப்பட்ட முறையில் கலாய்த்துக் கொண்டு சிரிப்பதை பிறர் முன்னிலையில் செய்து விட்டால் அவ்வளவுதான்.
கெட்ட பழக்கத்தை விட்டுவிடு என்று கூறினால் கோபமடையும் அதேவேளையில், குறைத்துக்கொள் என்றால் அன்பாய் சிடாய்பவர்கள் ஆண்கள்.
பொசஸிவ்நஸ் தான் கியூட்
தனக்கான பெண்ணின் உலகத்தில், தான்தான் ராஜா… எவர் ஒருவர் புதிதாக நடுவில் நுழையப் பார்த்தாலும் வந்துவிடும் அந்தப் பதற்றம். நம்மிடத்திற்கு அவர்கள் வந்து விடுவார்களோ என… ஆனால் எப்படி தன் இடத்தை தக்க வைத்துக்கொள்வது என்பது தெரியாமல் செய்யும் சொதப்பல்கள் தான் இருப்பதிலேயே க்யூட்டான ஒன்று.