சினிமா நடிகைகள் மட்டுமல்ல டிவி சானல் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் பாலிவுட் நடிகைகள் பலர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் அவர் நடிகை சலோனி சோப்ரா அண்மையில் மேலாடையில்லாமல் தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் நான் கருத்தரிக்கவில்லை. ஆனால் தத்தெடுக்க விரும்புகிறேன். சில பெண்களை குறிப்பிட்டு கருத்தரித்திருக்கிறாரா என கேட்காதீர்கள்.
ஏனெனின் அது உங்கள் வேலையல்ல. எல்லா பெண்களின் வயிறும் சமமாக இருப்பதில்லை. எல்லா ஆண்களுக்கு சிக்ஸ் பேக் இருப்பதில்லை. சில பெண்களுக்கு வடுக்கள், தழும்புகள் இருக்கிறது.
சிலருக்கு பருக்கள் இருக்கிறது. பல பெண்களுக்கு சிறந்த கூந்தல் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கிறது. ஆனால் எல்லா பெண்களும் அழகு தான். மற்ற மாடலிங் பெண்ணுடன் ஒப்பிட்டு தான் அழகாக இல்லையென நினைத்து அதிகமாக கவலைப்பட்டால் தன்னம்பிக்கையை இழந்துவிடுவோம்.
அற்புதமான பெண்ணை டேக் செய்யுங்கள். காரணத்தை கூறுங்கள் என ரசிகர்கள், ரசிகைகள் எல்லோருக்கும் டாஸ்க் கொடுத்துள்ளார்.