தற்போதைய அரசாங்கம் கடந்த 3 ஆண்டுகளாக வடக்கில் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், புதுடில்லியில் வைத்து தமிழக தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் இலங்கைத் தமிழர் விடயத்தில் உங்கள் நடவடிக்கை எவ்வாறானதாக இருக்கும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், யுத்தத்தின் பின்னர், வடக்கும், கிழக்கும் அபிவிருத்தி செய்யப்பட்டது.
குறிப்பாக வடக்கிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டு, வீடமைப்பு, மின்சாரம், வீதி, மருத்துவமனைகள், பாடசாலைகள் என அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால், தற்போதைய அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை.
அதனை மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள் என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தற்போதைய ஆட்சியில் இலங்கையின் வடக்கு மக்களின் நிலைமை என்னவாக உள்ளது? அவர்கள் சமாதானத்துடன் வாழ்கின்றார்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர்,
அங்குள்ள நிலைமை அமைதியாக இருக்கிறது.
எனினும், சட்டம் ஒழுங்கு சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோக குற்றங்களும், போதைப்பொருள் பாவனையும் அதிகரித்துள்ளன.
போதைப்பொருள் பாவனை தெற்கிலும் உள்ளது.
எனினும், வடக்கில் அது அதிகமாக உள்ளது என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.