இயக்குனர் சாம் ஆண்டன் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்த ‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். பின்னர் மீண்டும் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தையும் இவர் இயக்கினார்.
இப்படங்களுக்கு பிறகு சாம் ஆண்டன் தற்போது இயக்கி வரும் படம் ‘100’.
அதர்வா போலீஸாக நடித்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படியிருக்க சாம் ஆண்டன் புதிய படத்தை இயக்க சாம் ஆண்டன் ஒப்பந்தமாகியுள்ளார்.
‘கூர்கா’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தின் ஹீரோ காமெடியன் யோகி பாபு நடிக்கவுள்ளாராம்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை ‘4 Monkeys ஸ்டுடியோ’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ராஜ் ஆர்யன் இசையமைக்கவுள்ள இதற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.