Loading...
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘சாமி 2’ திரைப்படம் செப்டம்பர் வெளிவரவிருப்பதாக கடந்த சில நாட்களாக விளம்பரம் செய்து கொண்டிருந்தனர்.
தற்போது அதற்கான அதிகாரபூர்வ ரிலீஸ் திகதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அந்த அறிவிப்பின் படி இந்த படம் வரும் 21ம் திகதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
விக்ரம் ஜோடியாக கீர்த்திசுரேஷ் முதன்முதலாக நடிக்கும் இந்த படத்தில் பாபிசிம்ஹா வில்லனாக நடிக்கின்றார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘சாமி’ முதல் பாகத்தை இயக்கிய ஹரி இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மாபெரும் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...