இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குனர் என அறிமுகமானவர். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பின்னர் கடந்த வருடம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். சிம்பு நடித்த இந்த படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
இப்பொது மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் 3 ஹீரோயின்களோடு படம் ஒன்று வெளிவரவுள்ளது. சோனியா அகர்வால், அமைரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி ஆகியோரே இப்படத்தின் மூன்று ஹீரோயின்கள் .
‘விஷன் ஐ மீடியாஸ்’ இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
அபிநந்தன் இராமானுஜம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.
இந்த படத்துக்கு ‘காதலை தேடி நித்யா நந்தா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.