தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தை உயர்ந்த பட்ச அளவில் நடைமுறைப்படுத்தியிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் வேலைத்திட்டத்தின் 324 ஆவது திட்டத்தை வீரக்கெட்டிய மெதகம பிரதேசத்தில் ஆரம்பித்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கத்தில் உள்ள பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பிணைமுறி விவகாரத்தில் சிலரின் பெயரை பகிரங்கமாகக் கோரி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் தொடர்பில் எங்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் இருந்தாலும் அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு எதிராக இருந்தாலும் முறைப்பாடு செய்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முறையிட வேண்டாம் என ஜனாதிபதியோ பிரதமரோ கூட கூறவில்லை. அந்தளவிற்கு ஜனநாயகம் இந்த நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால், மக்களோ அடிமை அரசியலுக்கு அடிபணியும் நிலை உருவாகியிருக்கின்றது.
அரசியலுக்கு வரும் நபர் குறித்து கவனம் செலுத்தாத நிலை சமூகத்தில் காணப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்