ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலகடி சில்வா தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஏற்கனவே ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், மீண்டும் இன்றைய தினம் முன்னிலையாகியுள்ளார்.
துல்ஹிரி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் தன்னிடம் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலகடி சில்வாவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை வெளிப்படுத்திய பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வழங்குமாறு பிரதமர் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
குறித்த தொலைபேசி உரையாடலின் குரல் பதிவு உள்ள தொலைபேசியை இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார முன்னிலையாகியுள்ளார்.