Loading...
எரிபொருள் விலையேற்றத்துக்கான தீர்வை அரசாங்கம் தரமறுத்தால் எதிர்வரும் 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது அதிகரித்துள்ள எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து பேரூந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு கட்டண விலைச் சூத்திரமொன்றை ஏற்படுத்தி தமது பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
Loading...
அரசாங்கத்தினால் தீர்வொன்று வழங்கப்படாதவிடத்து இம்மாதம் 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...