வெட்டிவேர் என்பது பெரு பழமையான மூலிகை பொருளாகும். மேலும் இவை உடலுக்கு மிகுந்த குளிச்சியை தரும்.
வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த நீரை குடிப்பதன் மூலம் உடல் சூடு குறைகிறது. மேலும் இவை உடலின் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மை அடை உதவி செய்கிறது.
வீக்கத்தை குறைக்க
வெட்டிவேரின் மென்மை மற்றும் குளிர்ச்சியான தன்மை நரம்பு மண்டலம் மற்றும் சுழற்சி மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கிருமி நாசினி
பாக்டீரியாக்கள் மற்றும் நுண் கிருமிகளின் மூலம் காயங்கள் ஏற்படும் போது வெட்டிவேர் எண்ணையை காயங்களில் தடவுவதன் மூலம் பாக்டீரியா மற்றும் நுண் கிருமிகளை செயலிழக்க செய்கின்றன.
வரி தழும்புகள்
பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் ஏற்படும் வரி தழும்புகள் , கொழுப்பு பிளவுகள் , அம்மைக்கு பிறகு ஏற்படும் தழும்புகள், தீக்காயங்கள் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
வெட்டிவேர் டானிக்
வெட்டிவேர் டானிக் உடலின் எல்லா செயல்பாடுகளையும் சீரமைக்கிறது. செரிமானம், சுவாசம்,நோயெதிர்ப்பு,நரம்பு, நாளமில்லா சுரப்பி, போன்ற எல்லா உறுப்புகளையும் சரிபடுத்துகிறது.
கீல்வாதம்
வாத நோய், கீல்வாதம், தசை வலி , சரும வறட்சி மற்றும் சரும வெடிப்பு போன்றவற்றையும் தடுப்பதற்கு வெட்டிவேர் எண்ணெய் உதவுகிறது.
வடுக்கள் மறைய
வெட்டிவேரில் இருக்கும் சிக்காட்ரிஷன்ட் என்னும் ஏஜென்ட் உடலில் வடுக்கள் ஏற்பட்ட இடத்தில் புதிய திசுக்கள் வளர்ந்து இறந்த திசுக்களை மாற்றி அமைகிறது.
சரும சேதத்தை தடுக்கிறது
பாக்டீரியாக்களால் ஏற்படும் சரும தொந்தரவுகளை போக்கி, வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டுகள் வளச்சியை அதிகரிக்கிறது. இதனால் சருமம் பளபளப்பாக இருக்கிறது.