இந்தியாவை அதிர வைத்துள்ள அரியாணா பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியாணா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று கோச்சிங் வகுப்பு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 3 இளைஞர்கள் வழி மறித்து கடத்திச் சென்றனர்.
கிராமத்தில் யாரும் இல்லாத வயல்வெளியில் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்
சசுய நினைவு இழக்கும் வரையில் அந்த மாணவியை கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் பின்னர் அவரை பேருந்து நிறுத்தம் ஒன்றில் கீழே தள்ளிவிட்டு காரில் தப்பியோடி விட்டது.
தற்போது அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலியல் பலாத்கார சம்வத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மணிஷ், நிஷூ மற்றும் பங்கஞ் மூன்று பேரின் புகைப்படத்தை அம்மாநில காவல்துறையினர் வெளியிட்டனர்.
அதில் பங்கஞ் என்பவர் ராணுவ வீரர். இந்தநிலையில் பாலியல் வன்கொடுமையில் முக்கியக் குற்றவாளிகளில் 3 பேரில் ஒருவரை ஹரியாணா பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்,
அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில் முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய திட்டம் வகுத்துள்ளார் நிஷூ. மேலும் தனக்குத் தெரிந்த மருத்துவர் சஞ்சீவ்க்கு சொந்தமான வயலில் உள்ள அறையின் சாவியைப் பெற்றுள்ளார்.
பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து மாணவியைக் கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
10 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இதனால் பயந்துபோய் அந்த மாணவியை காரில் கொண்டு போய் கீழே போட்டுவிட்டு தப்பித்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம் தொடர்பான தகவல் அவருக்குத் தெரிந்திருந்தும் மறைத்த குற்றத்துக்காக அவர் மருத்துவர் சஞ்சீவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவி சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.