தற்கொலை செய்து கொண்ட நடிகை நிலானியின் காதலர் வெளியிட்ட புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஒரு படப்பிடிப்பில் இருந்த நடிகை நிலானியிடம், அவரின் காதலர் காந்தி லலித்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன் காதலர் தன்னை திருமணத்திற்கு வற்புறுத்துவதாக நிலானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் காந்தி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், இறப்பதற்கு முன் காந்தி லலித்குமார் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே, நிலானியும், காந்தி லலித்குமாரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது. அதில், காதலி நிலானி பற்றி உருக்கமாக பேசும் காந்தி, எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. நிலானி எனக்கு இன்னொரு தாய்.
அவள் எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் என உருக்கமாக பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.