திரைப்படத்தில் தம்முடன் நடித்த ஒருவர், தம்மை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக பிரபல நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், சமூகவலைதளங்களில் MeeToo என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, பல பிரபல நடிகைகளும், தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
ரஜினிகாந்தின் கபாலி திரைப்பட நடிகையான ராதிகா ஆப்தே, தமக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
அண்மையில் திரைப்படம் ஒன்றில் நடித்தபோது, தம்முடன் நடித்த நடிகர் ஒருவர், நள்ளிரவு நேரத்தில் ஏதாவது உதவி தேவை என்றால், தம்மை அழையுங்கள் எனக் கூறியதாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, திரைப்படக் குழுவினரிடம் புகார் அளித்ததால், அந்த நடிகர் தம்மிடம் மன்னிப்புக்கோரியதாகவும் ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.