பாடசாலை மாணவியின் ஆபாச காணொளியை இணையத்தில் வெளியிட்ட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பொலிஸ் பிரிவு மற்றும் சிறுவர் விவகார பணியகத்தினால் பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவியை ஆபாசமாக காணொளி பதிவிட்டு அதனை இணையத்தில் வெளியிட்டமை தொடர்பில் 17 வயதான பாடசாலை மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்ட மாணவன், குறித்த மாணவியை தொடர்ந்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு அச்சுறுத்தியுள்ளார்.
குறித்த மாணவனுடன், 16 வயதான மாணவிக்கு காதல் தொடர்பு காணப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதலியான மாணவியை மீண்டும் மீண்டும் தனிப்பட்ட அறைக்கு வருமாறு மாணவன் அழைத்துள்ளார். எனினும் அதற்கு மாணவி மறுத்தமையினால் அந்த காணொளியை மாணவன் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.