நடிகை நிலானி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர். இவர் தான் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரித்த போது, போலீஸ் உடையில் வந்து போலீஸ் அராஜகத்திற்கு எதிராக பேசியவர்.
இந்நிலையில் கணவரைப் பிரிந்து தனியாக வாழும் நிலானியும் சின்னத்திரை உதவி இயக்குனர் காந்தி லலித்குமாரும் கடந்த 3 ஆண்டுகளாக பழகி வந்த போதும் திருமண பேசசுவார்த்தை தொடர்பாக அவர்களிடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது.
இப்படியிருக்க அண்மையில் நாடக படப்பிடிப்பில் இருந்த நிலானியும் காந்தி லலித்குமாரும் திடீரென வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதன் போது காந்தி லலித்குமார் நிலானியை தகாத வார்த்தைகளால் மிக மோசமாக பேசியுள்ளார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பில் இருந்தவர்கள் காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நிலானி, மயிலாப்பூர் போலீஸ் நிலையம் சென்று, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக புகார் அளித்தார்.
இதைக் கேள்விப்பட்ட காந்தி லலித்குமார், நேற்று கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தீக்குளித்து, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஆனால் காந்தி லலித்குமார் இறப்பதற்கு முன் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.