அனைவரும் பிரியாணி சாப்பிடும் போது அவற்றின் இலைகளை நாம் ஒதுக்கி வைக்கிறோம்.
ஆனால் அத்தகைய பிரியாணி இலையில் புரதம் – 7.61 g வைட்டமின் எ – 206% வைட்டமின் சி – 77.5% பொட்டாசியம் – 529 mg சோடியம் – 23 mg ஜின்க் – 33% இரும்புசத்து – 537% போன்ற நிறைய ஊட்டசத்துக்கள் உள்ளது.
மேலும் பிரியாணி இலையை உணவில் மட்டும் சேர்த்து கொள்ளாமல், அவற்றை முக மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
என்றும் இளமையுடன் இருக்க
பிரியாணி இலைகள் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலின் செயல்பாட்டை சீராக வைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
மேலும் இவை முக சருமத்தில் உள்ள செல்களை மறு உற்பத்தி செய்து முகத்தை இளமையாக வைக்க உதவுகின்றன.
முடி உதிர்வை தடுக்க
இன்றைய கால மாற்றங்களினாலும் பல்வேறு வாழ்வியல் சூழலாலும் முடியின் ஆரோக்கியம் கெட்டு விடுகிறது.
தினமும் பிரியாணி இலை டீயைப் பருகி வந்தால் முடி உதிர்வு தொல்லையை முற்றிலும் நிறுத்த உதவி செய்யும்.
பொடுகு பிரச்சினையைப் சரிசெய்ய
பொடுகு பிரச்சினையைப் குணப்படுத்த பிரியாணி இலையை நீருடன் கொதிக்க வைத்து, வடிகட்டி கொள்ளவும்.
பின் அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.
சரும எரிச்சலைப் போக்க
5 காய்ந்த பிரியாணி இலைகளை எடுத்து 2 கப் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். பின்பு இந்த நீரில் எரிச்சல் கொண்ட சருமத்தை கழுவினால் சரும எரிச்சல்கள் நீங்கும்.
பாம்பு கடியை குணமாக்க
பிரியாணி இலைக்கு இயற்கையாகவே பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது.
இதன் இலை ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கள் தன்மை கொண்டது. எனவே தோலில் ஏதேனும் கிருமிகள் இருந்தாலும் அழித்து விடும்.
பேன் தொல்லையைப் போக்க
பிரியாணி இலைகளை நீரில் கொதிக்க விட்டு, வடிகட்டி பின் அதனை தலைக்கு அலச பயன்படுத்தினால் தலையில் உள்ள பேன் தொல்லை விரைவிலேயே நீங்கும்.