Loading...
கனடாவில் செயற்கையான கெட்ட கொழுப்புகளை உணவுகளில் சேர்க்க விதிக்கப்பட்ட தடை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இந்த தடை காரணமாக கனடாவில் உள்ள உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகள், இறக்குமதி ஆகும் உணவுகளில் செயற்கையான கெட்ட கொழுப்புகளை இனி சேர்க்க முடியாது.
உணவுகள் கூடுதல் சுவையாக இருக்கவும், மெருகூட்டவும் கெட்ட கொழுப்புகள் வெண்ணெய்க்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு வந்தன.
Loading...
இதன் காரணமாக உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதோடு, இதயநோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாலேயே இது தடை செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் நேற்றைய திகதிக்கு முன்னால் வரை உற்பத்தி செய்யப்பட்ட செயற்கை கொழுப்புகள் கலந்த உணவுகளை அடுத்த இரண்டாடுகள் வரை விற்பனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...