காதலர் தினம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. ஹிந்தியில் பல படங்களில் நடித்த இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருவதோடு ஆதரவு கூறிவருகின்றனர். அவ்வப்போது சோனாலி தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சிகிச்சையால் அவர் அழகான தலை முடியை இழந்துள்ளார். அவரின் தோற்றத்தால் பலருக்கும் அதிர்ச்சி தான்.
இந்நிலையில் அவரது தோழியும் பிரபல நடிகையுமான பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் உள்ள பிரபல விக் நிறுவனத்தில் ஆர்டர் செய்து ஸ்பெஷல் விக் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதோடு உனது அழகான கூந்தலை நீ இழந்திருப்பது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார்.
இதற்காக சோனாலி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளாராம்.