பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 24 ஏஎம் ஸ்டுடியோவே சிவகார்த்தியேனின் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளது. இப்படம் சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லராக தயாராக உள்ளதாக சிவகார்த்தியேன் சீமராஜா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார். இப்படத்தை இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்க உள்ளார்.
பெரிய படங்கள், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என மேலே ஏறிக் கொண்டிருக்கும் சிவாவுக்கு மேலும் ஒரு ட்ரீட் காத்திருக்கிறது. ஏ. ஆர்.ரஹ்மான் தான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்காக போட்ட ட்யூனை சிவாவுக்கு ரஹ்மான் அனுப்பிய போது, ட்யூனைக் கேட்ட சிவா, எனக்காக இந்த பாடலை நீங்களே பாடவேண்டுமென கேட்டுக் கொண்டார். நிச்சயம் பாடுவதாக ரஹ்மானும் ஒப்புக்கொண்டுள்ளாராம்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல்ப்ரீத் சிங் நடிக்க உள்ளார். இவர்களுடன் யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், கோதண்டம், இஷா கோபிகர், பானுப்பிரியா என பலர் நடிக்கின்றனர்.