Loading...
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக திட்ட அறிக்கையை தயாரிப்பதாக இந்திய விமானநிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக இந்திய வௌிவிவகார அமைச்சுடன் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
அதன்படி , பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்ட அறிக்கையை தயாரிப்பதாக இந்திய விமான நிலைய அதிகார சபை குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அதற்கு மேலதிகமாக , காங்கேசன்துறை விமான நிலையம் மற்றும் மத்தல சர்வதேச விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா யோசனைகளை முன்வைத்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...