Loading...
அதிக மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்து சாரதியொருவர் பலாங்கொடை – பின்னவல காவற்துறையால் கைது செய்யப்பட்டார்.
காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று பிற்பகல் குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
குறித்த சாரதி கைது செய்யப்படும் போது பேரூந்தில் 40 பாடசாலை மாணவர்கள் பயணித்ததாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரின் சாரதி அனுமதிபத்திரம் 10 மாதங்களுக்கு இரத்து செய்யப்பட்டு , ஏழாயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது
Loading...