ஹட்டன் நுவரெலியா வீதியின் கொட்டகலை நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்த நிலையில் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 4.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கி அதிக வேகத்தில் பயணித்த சிற்றூர்ந்து மாணவி மீது மோதியுள்ளதாக திம்புள்ள காவற்துறை தெரிவித்தது.
ஹட்டன் பிரதேசத்தின் தனியார் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 9ம் தர மாணவியொருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்து தொடர்பில் சிற்றூர்ந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , திம்புள்ள காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை , குறித்த விபத்து அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்தது.