பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ராமன் சிங்கின் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் அமல் அகர்வாலை கண்டித்து, காங்கிரஸ் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
नरेंद्र मोदी की हुकूमत में तानाशाही एक पेशा बन गया है| बिलासपुर में रमन सिंह की सरकार द्वारा कांग्रेस कार्यकर्ताओं के मौलिक अधिकारों पर बुज़दिली से किए गए इस प्रहार को वहाँ की जनता सियासी ज़ुल्म के रूप में याद रखेगी| pic.twitter.com/to7LDkXzEt
— Rahul Gandhi (@RahulGandhi) September 19, 2018