விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது .
இந்நிலையில் போட்டியாளர்கள் தங்களது நிலைபாட்டை தெரிவிக்க ‘பிக் பாஸ் ஃபினாலே’ ரேங்க் போர்டை பிக் பாஸ் அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் போட்டியாளர்கள் ரேங்க்படி நிற்க வேண்டும் என பிக் பாஸ் தெரிவித்துள்ளார்.
இதில் முதலாவதாக நான் தான் நிற்பேன் என ஜனனியும், யாஷிகாவும் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ‘டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க்கில் வெற்றி பெற்று இறுதி வாரத்துக்கு நேரடியாக முன்னேறிய ஜனனி, குட்டியா இருக்கறதால நான் குறைஞ்சவ இல்ல.. நான் தான் முதல் இடத்தில் நிற்க வேண்டும் என வாதிடுகிறார். இதனை மறுக்கும் யாஷிகா, ஒரு டாஸ்க்கை வைத்து முடிவெடுக்கக் கூடாது. எல்லா டாஸ்க்கினையும் பார்த்து முடிவு செய்ய வேண்டும் ஆகையால் நான் தான் முதல் இடத்திற்கு தகுதியானவள் என யாஷிகா தனது நிலைபாட்டை தெரிவித்துள்ளார்.