தொடர்ச்சியாக, 4ஆவது வருடமாக, யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டும் ஒக்ரோபர் 03ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் நோக்கம் சுயாதீன திரைப்படக் கலையை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதாகும். முப்பது வருட யுத்த இழப்புகளிலிருந்து மீளெழும் ஒரு முயற்சியாகவும் இது அமைகிறது.
யாழ்ப்பாண சர்வதேச தி;ரைப்பட விழா (Jaffna International Cinema Festival) ஒரு பக்கசார்பற்ற, சினிமாத்துறை சார்ந்த படைப்பாளிகளின் ஆக்க வெளிப்பாடுகளுக்கான ஒரு களமாகும். இது Agenda 14 மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தப்படுகிறது. இதன் கல்வித்துறைப் பங்காளியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறை விளங்குகிறது.
இந்த வருடத் திரைப்பட விழாவில் 30 நாடுகளைச் சேர்ந்த 80 திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவற்றுள் முழுநீள, விவரண, குறுந்திரைப்படங்கள் ஆகியன உள்ளடங்கும். விழாவில் – ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பூட்டான், பிரேசில், கனடா, குறோஷியா, கொலம்பியா, செக் குடியரசு, எகிப்து, பிரான்ஸ்;, ஜேர்மனி, இந்தியா, ஜப்பான், கர்க்கிஸ்தான், கஸாக்கிஸ்தான், மங்கோலியா, நேபாளம்;, போலந்து, பாகிஸ்தான், சிங்கப்பூர், சுலோவோக்கியா, இலங்கை, சுவிற்ஸலாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, வியட்நாம் ஆகிய நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த வருட Jaffna ICF ஒக்டோபர் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள மஜஸ்டிக் திரையரங்கில் மாலை 5.45 மணிக்கு ஆரம்பித்து, விருதுகள் வழங்கும் நிகழ்வு அதே திரையரங்கில் ஒக்டோபர் 8ஆம் திகதி மாலை 6.15 மணிக்கு இடம்பெறும்.
விழாவின் ஆரம்பத் திரைப்படமாக, ‘ த யங் கார்ல் மார்க்ஸ்’ (இயக்குனர் ஜேர்மனியைச் சேர்ந்த ரவூல் பெக் – (2017Æ18))> முடிவுநாள் திரைப்படமாக ‘சுவீற் கன்றி’ (இயக்குனர் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ‘வாரிக் தோன்ரன்’ (2017 Æ 113)ஆகியன திரையிடப்படுகின்றன.
மூத்த தலைமுறைக் கலைஞர்களைப் பாராட்டி கௌரவிக்கவும், இளம் தலைமுறை திரைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கவும் இவ்விழாவில் – வாழ்நாள் சாதனையாளர், சிறந்த முழுநீள அறிமுகத் திரைப்படம், மிகச் சிறந்த சர்வதேச குறுந்திரைப்படம், சிறந்த இலங்கை குறுந் திரைப்படம், மிகச் சிறந்த ஜனரஞ்சகத் திரைப்படத்துக்கான பார்வையாளர் விருது என 05 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இவ்வருட விழாவில் Saffaa Elaisy Haggag (Egypt), Urvashi Archana (India) and Muralitharan Mauran (Sri Lanka) ஆகியோர் அறிமுக திரைப்படங்களுக்கான நடுவர்களாக இருப்பர். Carla Maria Losch (Germany), Aunohita Mojumdar (India), Dr. S. Jeyasankar (Sri Lanka) ஆகியோர் குறுந்திரைப்படங்களுக்கான நடுவர்களாகப் பங்காற்றுவர்.
இந்த வருட விழா – மலையாள இயக்குனர் சஜி நாராயண் கருண்; படைப்புக்களை நினைவு கூரவிருக்கிறது. அவரின் ‘பிறவி’ (1989), ‘வனப்பிரஸ்தம்’ (1999), ‘குட்டி சிராங்’ ;(2009), ‘சுவப்பனம்’ (2013) ஆகிய முழுநீளத் திரைப்படங்களும்;, மேலும் 03 குறுந்திரைப்படங்களும்; ரசிகர்களுக்குக் காண்பிக்கப்படவுள்ளன. சஜி நாராயண் கருண் இவ்விழாவின் இறுதிநாள் நிகழ்வின்போது பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
யாழ்ப்பாண சர்வதேச தி;ரைப்பட விழாவின் இந்த ஆண்டுக்கான முன்னிலைப்படுத்தப்படும் நாடாகப் போலந்து விளங்குகிறது: போலந்து நாட்டு திரைப்பட இயக்குனர்களான Andrzej Wajda, Krzysztof Kieslowski, Roman Polanski , Andrzej Munkand Jerzy Kawalerowicz ஆகியோரின் புத்தாக்கம் செய்யப்பட்ட மூன்று திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.
இலங்கைத் திரைப்படப் பிரிவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விவரணப்படத் தொகுதி ஒன்றை இரண்டாவதுமுறையும் இந்த விழாவில் வழங்கவிருக்கிறது.
சிறப்புத் திரைப்படங்களாக தீபா மேத்தாவின் ‘வன்செயலின் கட்டமைப்பு’ (The Anatomy of Violence), லூயிஸ் ஒஸ்மண்ட்டின் ‘‘Versus: The Life and Films of Ken Loach’, பிராட் ஓல்கூட் மற்றும கிரஹாம் ரௌன்சிலியின் ‘Landfill Harmonic’ ஆகியன காண்பிக்கப்படவிருக்கின்றன.
பிராட் ஓல்கூட் – விவரணத்திரைப்படங்கள் குறித்த பயிற்சிப்பட்டறையொன்றை நடாத்த இருப்பதுடன் ‘திரைப்படங்களுக்கான பொதுமக்கள் நிதி திரட்டல்’ சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்துகொள்ளவிருக்கிறார். விருதுகள் பல பெற்ற Shaji Narayan Karun, Urvashi Archana (India) மற்றும் சிறந்த திரைப்பட விமர்சகர் Saffaa Elaisy Haggag (Egypt) ஆகியோரும் திரைப்படத்துறை சார்ந்த பயிற்சிப் பட்டறைகளை நடாத்தவுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவரும் காண்பியக் கலைஞருமான கலாநிதி; ரி. சனாதனன் ‘வெள்ளித்திரை: 70 – 80 களின் யாழ்ப்பாண சினிமாக்களுடனான ஒரு பயணம்’ குறித்த தொகுப்புரையை வழங்கவுள்ளார்.
இலங்கைத் திரைப்பட ஓளிப்பதிவுக் கலைஞர் வைரமுத்து வாமதேவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி, அவரின் சினிமாத்துறைப் பங்களிப்புக்கு யாழ்ப்பாண சர்வதேச தி;ரைப்பட விழா மரியாதை செய்யவிருக்கிறது.
சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனம் தொடர்ந்தும் இரண்டாவது தடவையாகச் சிறந்த குறுந்திரைப்படத்திற்கான விருதினையும், பணப்பரிசு ரூபா ஒரு இலட்சத்தையும் வழங்கவிருக்கின்றது.
இவ்விழாவின் பிரதான அரங்குகளாக மஜெஸ்டிக் கொம்ப்ளெக்ஸ் – கார்கில்ஸ் சதுக்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கம்; மற்றும் யாழ். நூலகக் கேட்போர் கூடம் ஆகியன அமையவுள்ளன. தொடர்புடைய ஏனைய நிகழ்வுகள் பிரித்தானிய கவுன்ஸிலிலும், அமெரிக்கன் கோர்னரிலும் இடம்பெறும்.
விழாவினை நடாத்த உதவும் ஏனைய பங்காளிகளாக – அரசாங்கத் திரைப்படப் பிரிவு, திண்ணை ஹோட்டல்ஸ், ஆண்ட்ரூ டிரவல்ஸ் கொம்பனி, யாழ். ஊடக அமையம், சூரியன் எவ். எம்., கோதே இன்ஸ்ரியூட், கிரைசலீஸ் மற்றும் ஜி.ஐ. சட் ஆகியவை அமைகின்றன.
British Council, Embassy of France, Alliance Francise de Kotte, InstitutFrancais, Embassy of Switzerland, Embassy of Italy, Embassy of USA, Consulate of Slovakia, High Commission of Canada, High Commission of Australia, Polish Institute in New Delhi, Embassy of Czech Republic in New Delhi, Iran Cultural Center and UNFPA ஆகியன திரைப்படங்களை வழங்கி உதவுகின்றன.