நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது வெளிப்படையாக பேசினால் என்னவாகும் என்பது பற்றி பாலிவுட் நடிகை கஜோல் கருத்து தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது பற்றி ஹாலிவுட் பிரபலங்கள் துணிச்சலாக பேசுவது போல் பாலிவுட் பிரபலங்கள் பேசுவது இல்லை என்ற குற்ற சாட்டு உள்ளது. இது பற்றி நடிகை கஜோல் கூறிய போது,
ஹாலிவுட்டை போன்று பாலியல் தொல்லை குறித்து பேசும் #MeToo இயக்கம் பாலிவுட்டில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் வர வேண்டும். ஆனால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று கூறிய பிறகு அந்த நபருக்கு என்ன நடக்கும்?
பாலியல் தொல்லை குறித்து பேசுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெட்கப்படத் தேவையில்லை. பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெளிப்படையாக பேசிவிட்டால் தங்களின் கெரியர் நாசமாகிவிடுமோ என்ற பயத்தில் தான் பலரும் வாய் திறப்பது இல்லை என்று சில நடிகைகளே தெரிவித்துள்ளனர், என்கிறார் கஜோல்.