அனா அம்மையார் இவர் வெள்ளை இனத்தை சேர்ந்தவர். மனிதவுரிமை செயற்பாட்டாளர் தமிழ் மக்கள் அனைவரும் இவரை வரவேற்காமல் தமிழ் இனத்திற்காக குரல் கொடுக்காத ஒவியாவை வரவேற்பது நியாயமா? என தமிழர் ஒருவர் சமூக வலைதளங்களில் தனது ஆதாங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு நீதி கோரி ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஜெனிவா வருகிறார்.
வருடத்தில் ஒரு நாள் நீதி கோரிவிட்டு கலைந்து செல்வதை விட நீதி கிடைக்கும்வரை ஒவ்வொரு நாளும் தமிழ் மக்கள் போராட வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார்.
ஓவியா. இவர் ஒரு மலையாள நடிகை. இவர் தமிழ் இனத்திற்காக இதுவரை குரல் கொடுத்ததில்லை.
ஆனாலும் தமிழ் மக்களில் சிலர் அவருக்கு “ஓவியா ஆர்மி” அமைக்கிறார்கள்.
அவர் செல்லுமிடமெல்லாம் கூட்டமாக திரண்டு வரவேற்பளிக்கிறார்கள்.
நம்மவர்கள் ஓவியாவை தெரிந்து வைத்திருக்குமளவிற்கு எமக்காக குரல் கொடுக்கும் அனா அம்மையாரை தெரிந்து வைத்திருக்கவில்லை.
இந்நிலையில் இனியாவது இந்த நிலையை மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.