Loading...
சிறுத்தை சிவா மற்றும் நடிகர் அஜித் ஆகியோர் 4 ஆவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் விஸ்வாசம்.
பொங்கல் ரிலீஸிற்காக படப்பிடிப்பு தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் அஜீத்திற்கு இரட்டை வேடமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்தநிலையில் இப்படத்தில் அஜீத் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த விவரங்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்குக் கிடைத்துள்ளது.
Loading...
அதன்படி இப்படத்தில் அஜீத்தின் பெயர் ‘தூக்குதுரை’.
ஏற்கனவே படத்தின் சண்டைக்காட்சியொன்றின் படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் பெயரும் வெளியாகியுள்ளது.
Loading...