Loading...
‘இரும்புத்திரை’ படத்துக்கு பின் விஷால் ‘சண்டக்கோழி 2’ மற்றும் வெங்கட் மோகனின் ‘அயோக்யா’ படங்களில் நடித்து வருகிறார்.
‘சண்டக்கோழி 2’ படத்தை அக்டோபர் 18ம் திகதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ‘அயோக்யா’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில், விஷால் தனது ரசிகர் மன்றத்தின் பெயரை ‘மக்கள் நல இயக்கம்’ என பெயர் மாற்றினார்.
Loading...
தற்போது, தெலுங்கில் நடிகை லக்ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கிய ‘மேமு சைத்தம்’ என்ற நிகழ்ச்சியை தமிழில் விஷால் தொகுத்து வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
Loading...