ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள சாமி படத்தின் 2ம் பாகமான சாமி 2 நாளை உலகம் முழுவதும் வெளியாகின்றது.
ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம், த்ரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான படம் சாமி.
இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் 2ம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது. சுமார் 15 வருடங்களின் பின்னர் இப்படம் வெளியாகின்றது.
இப்படத்தில் விக்ரம், பிரபு, பாபி சிம்ஹா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஜான் விஜய், சூரி, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, சுமித்ரா, உமா ரியாஸ் கான், டெல்லி கணேஷ் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
திருநெல்வேலி ஜில்லாவையும், போலீஸ் கதாபாத்திரத்தையும் மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இப்படம் வெளியாகவுள்ளது. சாமி படத்தைப் போன்று பஞ்ச டயலாக், காமெடி, ரொமாண்டிக், செண்டிமெண்ட் ஆகியவை இப்படத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படம் தமிழ் நாட்டில் சுமார் 450 திரையரங்குகளில் வெளியாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இப்படத்தின் Sneak Peak 2 காட்சி இதோ: