ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் திட்டிய விடயம் தொடர்பில் பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்துள்ளது.
குறித்த சதித்திட்டத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதானியாக செயற்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவை கட்டாய விடுமுறையில் அனுப்ப நேற்று பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்தது.
இந்நிலையில், பொலிஸ்மா அதிபரையும் கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை இரண்டு வாரங்களுக்கு பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் திணைக்களத்திற்குள்ளேயே அரசாங்கத்திற்கு எதிராக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் அண்மைய காலமாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.