சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே இணைந்து நடித்த படம் அர்ஜுன் ரெட்டி. காலத்திற்கு தகுந்த காதல் படம் என்பதால் நல்ல ஹிட் கொடுத்தது .அதே போன்று தான் இவர் நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் நல்ல ஹிட் கொடுத்தது .தற்பொழுது தமிழில் நோட்டா திரைப்படத்தில் நடித்து வருகின்றார் .
இதனால் விஜய் தேவரகொண்டாவுக்கு தெலுங்கு மட்டுமன்றி தமிழ் ரசிகர்களிடமும் ஆதரவு பெருகியது.
இந்நிலையில் அயல் நாடு பெண்ணுடன் சுற்றி திரியும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது .
மேலும் இந்த புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டது.
தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இருந்த பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த விர்ஜினி என்ற பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லீக்கான புகைப்படங்களுடன், விஜய் தனது குடும்பத்தினருடன் விர்ஜினியுடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2016ம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடித்த ‘பெல்லி சூப்புலு’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய விர்ஜினிக்கும், விஜய்க்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் உண்மை தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த விவகாரம் குறித்து விஜய் தேவரகொண்டா எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.