நபர் ஒருவர் முழு நிர்வாணமாக நான்கு காவல்துறையினரை தாக்கியுள்ள சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. ஆனால் இத்தகவல் இன்று வெளியாகியுள்ளது.
இச்சம்பவம், செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில், Cergy (Val-d’Oise) இல் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய நபர் ஒருவர் Cergy-Prefecture RER நிலையத்துக்கு முன்பாக, முழு நிர்வாணமாக நின்றுகொண்டு, வீதியில் சென்றுகொண்டிருந்த நபர்களை பயங்கரமாக தாக்கிக்கொண்டிருந்துள்ளார். உடனடியாக இது தொடர்பான தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அங்கு வந்த காவல்துறையினரையும் குறித்த நபர் ஆக்ரோஷமாக தாக்கியுள்ளார். அதிலொரு காவல்துறை அதிகாரியை இரத்தம் வரும் அளவுக்கு கடித்துள்ளார். காவற்துறையினர் ஒருவழியாக குறித்த நபரை கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.