பிரித்தானியாவில் தந்தை கையால் கொல்லப்பட்ட மகள் இறுதியாக அழகான சிரிப்புடன் பீட்சா சாப்பிட்ட மனதை உருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
வில்லியம் பில்லிங்கன் என்பவர் தனது மனைவி டிரேஷியுடன் வசித்து வந்தார். தம்பதிக்கு மயிலி என்ற மகள் உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் வில்லியமுக்கும், டிரேஷியிற்குமிடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து டிரேஷிக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தார்.
இது வில்லியமுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில் அவரை பழிவாங்க அவர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தனது மகள் மயிலியை கத்தியால் குத்தி கொலை செய்தார் வில்லியம்.
இதனிடையில் மயிலி இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் ஜாலியாக உட்கார்ந்து பீட்சா சாப்பிட்டுள்ளார். இது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது, தந்தை தன்னை கொல்லபோவதை அறிந்த மயிலி என்னை விட்டுவிடுங்கள் அப்பா என கதறியதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கைது செய்யப்பட்ட வில்லியம் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த விசாரணையில், மைலியை வில்லியம் கொன்றது விபத்து கிடையாது, இது திட்டமிட்ட கொலை என டிரேஷி சாட்சி கூறியுள்ளார்.
முதலில் தன் மீதான குற்றத்தை மறுத்த வில்லியம், தற்போது ஒரு நிமிடத்தில் இந்த முட்டாள்தனமான காரியத்தை செய்துவிட்டேன் என ஒப்பு கொண்டுள்ளார். அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது.