மட்டக்களப்பு ஆரையம்பதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு இந்த விக்கரகங்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் இன்று அதிகாலை ஆலயத்திற்கு வழிபாடுகளுக்கு சென்றவர்களே இதனைக்கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது ஆலயத்திற்கு முன்பாகவிருந்த விக்கரகங்கள், திரௌபதையம்மன்,ஆஞ்சநேயர் ஆலய விக்கிரகங்களும் பரிபாலன தெய்வ சூழங்களும் உடைக்கப்பட்;டுள்ளதுடன் மட அறையும் உடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலய மூலஸ்தான கதவுகளும் உடைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் அமைக்கப்படுவதற்கு முன்னர் இருந்தே தொல்லைகள் தரப்பட்டு வருவதாகவும், பல தடவைகள் இந்த ஆலயம் உடைக்கப்பட்டும், எரியூட்டப்பட்டும் இருந்ததாகவும் தெரிவிக்கும் கிராமத்தவர்கள், ஒரு தடவை இந்த ஆலயத்தின் நடுவே மாடொன்றை வெட்டிக்கொண்டுவந்த போட்டுவிட்டுச் சென்றதாகவும் கூறுகின்றார்கள்.
காத்தான்குடி என்ற முஸ்லிம் கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தை அகற்றும் நோக்கோடும், காத்தான்குடியைச் சேர்ந்த சிலரே இந்தக் காரியங்களைச் செய்து வருவதாகக் குற்றம் சுமத்துகின்றார்கள் ஆரயம்பதி வாழ் மக்கள்.