துபாயில் உள்ள ரிசார்ட்டில் த்ரிஷா டால்பினை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டார். கண்டதும் காதல் என்று தலைப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டார்.
அந்த புகைப்படங்களை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் கோபம் அடைந்துள்ளனர். பீட்டா விளம்பர தூதுவராக இருந்து கொண்டு இவ்வாறு டால்பினை கொடுமைப்படுத்தியுள்ளார் த்ரிஷா என்று அவர்கள் கொந்தளித்துள்ளனர்.
டால்பின்களை அடைத்து வைத்து மனிதர்களுடன் விளையாடச் செய்வது அவைகளை டார்ச்சர் செய்வதாகும். த்ரிஷா, நீங்கள் எல்லாம் பீட்டா தூதுவர் என்று வெளியே சொல்லாதீர்கள். பணக்காரர்களை மகிழ்விப்பது டால்பினின் வேலை அல்ல என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
Believe in love at first sight?❤ pic.twitter.com/5IevZvYbuW
— Trish Krish (@trishtrashers) September 17, 2018