நடிகை நிலானியின் காதலன் தற்கொலையை அடுத்து அவரின் மீது பல குற்றச்சாட்டு எழுந்தது. நிலானிக்கு ஆதரவாக கருத்து வந்தாலும் அவர் மீது பல விமர்சனங்கள் வர நேற்று கொசுமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதற்கு காதலன் லலித்தின் அண்ணன் ரகு தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
இதுபற்றி ரகு கூறுகையில், லலித் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது வாய்ப்பு கேட்டுபோன நிலானியுடன் பழக்கமாகி தான் இருவரும் ஒன்றாக இருந்துள்ளார்கள்.
இது எங்களுக்கு தெரிந்து கண்டித்தோம். ஆனால் கேட்கவில்லை. அவன் எங்கள் சொத்தில் விற்ற பங்கு ரூ. 9 லட்சத்தை இவருக்காகத்தான் செலவு செய்தான். தவறு இருவர் மீதும் தான் உள்ளது. ஆனால் லலித் மீது மட்டுமே தவறு என்பது போல பேசி இறந்தவனை மேலும் சாகடிக்கிறார்.
நிலானி பற்றிய உண்மையான ஆதாரங்கள் இருக்கிறது. அதை அவரின் இரு குழந்தைகளின் எதிர்காலத்துக்காகத்தான் வெளியிடாமல் இருக்கிறேன்.
இனியும் லலித்தை பற்றி தவறாக பேசினால் அதை வெளியிட வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.