கிழக்கு ஆப்ரிக்க நாட்டில் லேக் விக்டோரியா எனும் ஏரி அமைத்துள்ளது. இந்த ஏரியானது தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு அமைந்துள்ளது. இந்த ஏரியானது உலகின் மிகப்பெரிய மூன்றாவது ஏரியாகும். இந்த ஏரியானது சுமார் 69 ஆயிரம் கிமீ பரப்பளவும், 272 அடி ஆழமும் உடையதாகும்.
இங்குள்ள மக்கள் மற்றும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள தீவுகளுக்கு செல்ல படகு போக்குவரத்து பிரதான போக்குவரதாக பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான்சானியா நாட்டில் உள்ள உகாரா எனும் தீவில் இருந்து பகோலோரா என்ற மற்றொறு தீவிற்கு படகு மூலம் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
இந்த படகில் அளவுக்கு அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர். படகு தயாராகி சிறிது தூரம் சென்றவுடன் பளு தாங்காமல் ஏரியில் படகானது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 79 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. எனினும், 100-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்டுள்ளதாக தகவல் வெளிவந்திருக்கிறது.
இந்நிலையில், ஏரியில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படகில் பயணம் செய்த மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.