ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அட்லி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
அட்லியின் பிறந்த நாளான இன்று, பல்வேறு திரை பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவருடைய மனைவி ப்ரியா, ட்விட்டரில் தனது காதல் கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
உன்னிடமுள்ள அனைத்து விஷயங்களையும் நான் வியக்கிறேன். உன்னை விடவும் எனக்கு ஒரு சிறந்த நண்பன் கிடையாது. உங்களை விடவும் ஒரு சிறந்த கணவர் கிடையாது. உங்களை விடவும் ஒரு சிறந்த மகன் கிடையாது. உங்களை விடவும் ஒரு சிறந்த மருமகன் கிடையாது. நான் வியக்கும் மனிதருடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டு அவருடன் இருப்பதை ஆசிர்வாதமாகக் கருதுகிறேன். என் அனைத்துமாக உள்ள அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
May be I admire every thing in u,ter can be no better friend than u,can be no better husband than u,can be no better son than u,can be no better son in law than u,I’m truly blessed to share my life &stand beside the person I admire the most happy bday my everything @Atlee_dir pic.twitter.com/S80rPnH29d
— Priya Mohan (@priyaatlee) September 21, 2018