Loading...
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஆசிக்குளம், கட்டுக்குளம் பகுதியை சேர்ந்த நடராசா போதநாயகி என்ற 29 வயதுடைய விரிவுரையாரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட விரிவுரையாளரின் கைப்பை மற்றும் பாதணியும் இன்று காலை சங்கமித்த கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
Loading...
இந்நிலையில் இன்று பிற்பகலே விரிவுரையாளரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் தொடர்பில் திருகோணமலை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...