ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதைத் தவிர்க்கும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எட்டுபேரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியமை குறித்து இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அவரிடம் கையளித்ததன் பின்னர், அதனுடன் தமக்கு தொடர்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளுக்கு அமையவே, சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் தங்கியுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.