பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கு பற்றி தனது கள்ளங்கபடமற்ற மனதால் பார்வையாளர்களை மட்டுமன்றி போட்டியாளர்களையும் கவர்ந்த சென்ராயன், யாருமே எதிர்பார்க்காத வண்ணம் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
சென்ராயன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியதிலிருந்து வீட்டில் இருந்தவரை பாலாஜியிடம் தான் அதிகம் நெருக்கமாக இருந்து வந்தார். பாலாஜி எப்படியாவது நித்யாவிடம் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று சென்ராயன் எப்போதும் கூறிவந்தார். நித்யா பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை அவருடனும் மிகவும் பாசமாக நடந்து கொண்டார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து சென்ராயன் வெளியேறியதும் பாலாஜியின் மனைவி நித்யாவையும், அவரது மகள் போஷிகாவையும் நேரில் சென்று சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.