Loading...
தெஹிவளை – அத்திடிய பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மதுபானத்துடன் நபர் ஒருவர் காவற்துறை அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறை அதிரடி படையினருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றிவளைப்பின் போது 714 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவ்வற்றின் பெறுமதி 60 லட்சத்துக்கும் அதிகம் என காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...
சந்தேக நபர் அத்திடிய பிரதேசத்தினை சேர்ந்த 56 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் தெஹிவளை காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Loading...