இரவு நேரத்தில் நன்றாக தூங்கி எழுவது உங்களை சுறுசுறுப்புடனும், புத்துணர்வுடனும் மற்றும் ஆரோக்கியமாக உணர செய்யும். அப்படி நீங்கள் சரியாக உறங்கி எழவில்லை என்றால், பகல் முழுவது சோர்வு, தூங்கி விழுவது, எரிச்சல் மற்றும் வேலையில் நாட்டமின்மை போன்றவற்றால் மிகவும் அவதிப்பட நேரிடும். இவை எப்போதாவது ஏற்பட கூடிய ஒன்று. ஆனால், நீங்கள் என்னதான் நன்றாக தூங்கி எழுந்தாலும் உங்களுக்கு சோர்வு ஏற்பட்டால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
பொதுவாக பெரியவர்கள் ஒருநாளைக்கு குறைந்தது ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூங்க வேண்டியது அவசியமாகிறது. அப்படி நன்றாக உறங்கியும் உங்களுக்கு அடுத்த நாள் காலையில் சோர்வு ஏற்படுவது, நாள் முழுவதும் சோம்பலை உணர்வது போன்றவை இருப்பது உங்கள் உடல் அல்லது மனம் சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். இதற்கான காரணங்களை நாம் இங்கு பார்க்கலாம்.
உடற்பயிற்சி அவசியம்
பெரும்பாலானவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதே சலிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. ஆனால், அது எப்போதும் ஒரு விஷயமாக இருப்பதில்லை. முடிந்தவரை குறிப்பிட்ட நேரத்தை உடற்பயிற்சி நிலையத்திலோ அல்லது உடற்பயிற்சி செய்வதிலோ செலவிட்டால், உங்கள் முழு ஆற்றலும் வீணாகாமல் உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பதும் சோர்வை ஏற்படுத்தும் ஒரு காரணமாகும். தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உங்களை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
நீர்சத்து குறைபாடு
உடலில் நீர்சத்து குறைவது உங்களை மிகவும் லேசாக உணர செய்வதோடு, மயக்கம் மற்றும் தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இது உங்களை மிக மிக அதிகமாக சோர்வடைய செய்யும். இந்த நீர்சத்து இழப்பானது உங்கள் உடலின் இரத்த ஓட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதால், இதயத்தின் செயல்திறனை குறைக்கும். இதனால் எப்போதும் நீங்கள் சோர்வை உணர்வீர்கள்.
மனஅழுத்தம்
மனஅழுத்தத்தின் மிக பொதுவான அறிகுறியாக இருப்பது சோர்வு. மனஅழுத்த நோய் எப்போதும் உங்களை சோர்வாக உணர செய்யும். நீங்கள் எவ்வளவு தான் நன்றாக தூங்கினாலும், மனஅழுத்ததில் இருக்கும் போது உங்களால் சோர்வு விரட்ட முடியாது. இதை மனஅழுத்தில் இருக்கும் போது யாரும் உணர்வதில்லை. மன அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி மிகவும் களைப்பாக உணர்வதோடு, எந்த ஒரு செயலை செய்வதிலும் ஆர்வமற்றவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், மன அழுத்தம் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறீர்கள் என்றால், அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது சிறந்தது.
அதிகமாக காபி குடிப்பது
நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு ஆறுமணி நேரத்திற்கு முன்பு குடித்திருக்கும் காபி கூட உன்னால் தூக்கத்தை கெடுக்கும். இதை நீங்கள் உணரவில்லை என்றாலும் உண்மையே. காபி நம்மை சுறுசுறுப்புடனும், விழிப்புடனும் வைத்திருக்க உதவும் ஒன்று. ஆனால், அதிக அளவில் எடுத்து கொண்டால் இதில் இருக்கும் காஃபைன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது உங்கள் அடினோசின் உற்பத்தியில் குழப்பம் விளைவிக்கும் அதனால் நீங்கள் தூக்கத்திற்கு செல்ல அதிக நேரம் எடுக்கும்.
காலை உணவு மிக அவசியம்
இதை நீங்கள் பலமுறை கேட்டிருக்கலாம். நீங்கள் சாப்பிடும் உணவுதான் உங்கள் உடல் இயங்குவதற்கு உதவும் எரிபொருள் ஆகும். நீங்கள் இரவு சாப்பிடும் உணவு உங்கள் உடலுக்கு தேவையான ஆக்சிஜனையும், இரத்த ஓட்டத்தையும் வழங்குகிறது. எனவே நீங்கள் காலை எழும்போது உங்கள் உடல் மீண்டும் இயங்க உணவு தேவை. என்வே அப்பொழுது காலை உணவை தவிர்ப்பது சோர்வை ஏற்படுத்தும்.
ஊட்டச்சத்து குறைபாடுகள்
நீங்கள் போதிய இரும்பு சத்து எடுத்துக்கொள்ளாத போது உங்கள் உடல் எப்பொழுதும் சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்கும். உணவை ஆற்றலாக மாற்றும் வைட்டமின் பி குறிப்பது கூட சோர்வை உண்டாக்கும். இதனால் நீங்கள் எப்பொழுதும் தூக்கம் வருவது போலவே உணருவீர்கள். உங்கள் உடலில் மெக்னீசியம் குறையும்போது அடிக்கடி மயக்கம் வரும்.
பதட்டம்
மனஅழுத்தம் மட்டும்தான் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் ஒரே உளவியல் பிரச்சினை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏனெனில் பதட்டமும் கூட தூக்கத்தை கெடுக்கும். மனதில் கவலையும், பதட்டமும் இருக்கும்போது நீங்கள் எவ்வளவுதான் தூங்கினாலும் சோர்வாகவே காணப்படுவீர்கள். இது தூக்கத்தை மேலும் அமைதியற்றதாக்குவதோடு, உங்களை அடிக்கடி விழிக்கவும் வைக்கும். இந்த பிரச்சினைக்கு உளவியல் மருத்துவரை விரைவில் அணுகுவதே நல்லது.
மோசமான ஆரோக்கிய பிரச்சினைகள்
சிலசமயம் நன்றாக தூங்கியும் சோர்வாகவே இருப்பது சர்க்கரை நோய், அனிமியா, தைராய்டு போன்ற மோசமான ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு அறிகுறியாக இருக்கலாம். அனிமியா உங்களை பலவீனமாகவும், சுவாசிக்க முடியாமலும் செய்யக்கூடியது.இதற்கு காரணம் போதிய இரத்த ஓட்டம் இல்லாதது, சிறுநீரக பிரச்சினை சிலசமயம் புற்றுநோயாக கூட இருக்கலாம். தைராய்டு மற்றும் சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறி சோர்வு ஆகும். எனவே ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்து சோர்வாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.