மாலைதீவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றுவருகின்ற நிலையில் கொழும்பிலுள்ள வதிவிடத் தூதரகத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில், மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யாமின் மீண்டும் போட்டியிடுவதுடன் அவரை எதிர்த்து இப்ராஹிம் மொஹமட் களமிறங்கியுள்ளார்.
அந்தவகையில் இலங்கை, இந்தியா மற்றும் பிரித்தானியா, மலேசிய போன்ற நாடுகளில் இதற்காக 472 வாக்கு பெட்டிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
அதில் கொழும்பில் மட்டும் 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றது.
இலங்கையில் வசித்துவரும் மாலைதீவு பிரஜைகள் சுமார் 2700 பேர் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணி வரை வாக்குப்பதிவுகள் நடைபெறும் எனவும் தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகள் நாளை அதிகாலை 3 மணிக்கு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.